இளைஞன் திரைப்பட வசனத்துக்காக கருணாநிதிக்கு விருது
2/9/2011 11:34:43 AM
நாக்பூரில் உள்ள நிர்சார் பிலிம் சொசைட்டி சார்பில் இன்டர்நேசனல் பிலிம் பெஸ்டிவல் நாளை (10ம் தேதி) நடத்தப்படுகிறது. இதில் சிறந்த வசனத்திற்கான விருதுக்காக இளைஞன் திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்துக்கு முதல்வர் கருணாநிதி வசனம் எழுதியுள்ளதால் சிறந்த வசனத்திற்கான விருது அவருக்கு வழங்கப்படுகிறது. நாளை நடைபெறும் விழாவில் முதல்வர் கருணாநிதி சார்பில், நடிகை குஷ்பு, நடிகர் ப.விஜய், இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா, தயாரிப்பாளர் மார்ட்டின் ஆகியோர் விருது பெற்றுக் கொள்கின்றனர்.
இந்த தகவலை நாக்பூர் கலெக்டர் பிரவீன் தெரிவித்துள்ளார்.
Source: Dinakaran
Post a Comment