2/8/2011 12:47:33 PM
'சட்டப்படி குற்றம்Õ படத்தில் நடிக்கும் பானு கூறியது: ÔதாமிரபரணிÕ படத்துக்கு பிறகு தமிழில் நல்ல ஸ்கிரிப்ட் வரவில்லை. இதற்கிடையில் மலையாளத்தில் 12 படங்களில் நடித்துவிட்டேன். தற்போது தமிழில் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கும் 'சட்டப்படி குற்றம்Õ படத்தில் நடிக்கிறேன். வீரப்பன் பதுங்கி இருந்த சத்தியமங்கலம் காட்டுப் பகுதியில் ஷூட்டிங் நடந்தது. குளிரும், வெயிலும் மாறி மாறி வந்ததுதான் காட்டில் பிரச்னை. மற்றபடி எந்த பிரச்னையும் இல்லை. வீரப்பன் பதுங்கி இருந்த இடங்களை சிலர் காட்டினர். பொதுவாகவே எனக்கு துணிச்சல் அதிகம். அதனால் காட்டுப்பகுதியில் எந்த பயமும் இல்லை. ரோப் கட்டி, வலைகள் கட்டியும் உயரத்தில் ஏறி நடித்த காட்சிகள் த்ரில். நாட்டுக்காக போராடும் பாத்திரத்தில் சத்யராஜ் நடிக்கிறார். அவருக்கு உதவும் வேடம் எனக்கு. ஹீரோ விக்ராந்துடன் காதல் காட்சிகள் இருந்தாலும் டூயட் எதுவும் இல்லை. இயக்குனர் சந்திரசேகர் கோபக்காரர், திட்டுவார் என்றார்கள். ஆனால் ஷூட்டிங்கில் நான் நடித்ததை பாராட்டியவர், இதேபோல் படம் முழுவதும் நடித்தால்போதும் என்றார்.
'தாமிரபரணிÕ படத்தில் பாவாடை, தாவணி அணிந்து நடித்தாலும் பாடல் காட்சிகளில் கவர்ச்சி உடைகள் அணிந்தேன். அதைப் பார்த்த தோழிகள், 'ஏன் கவர்ச்சியாக நடித்தாய்?Õ என்றார்கள். இனி கவர்ச்சியாக நடிக்க மாட்டேன். கவர்ச்சி காட்டாவிட்டால் வாய்ப்பு வராது என்கிறார்கள். அப்படி நடிப்பதைவிட சும்மாவே இருந்து விடுவேன். 'தெலுங்கு படங்களில் நடிப்பீர்களா?Õ என்கிறார்கள். அப்படி ஒரு எண்ணம் இல்லை.
Post a Comment