பில்லி சூனியம் ஏவி தம்மை முடக்க முயற்சி: ராஜ்கிரண் பரபரப்பு புகார்!
2/15/2011 10:45:54 AM
பில்லி சூனியம் ஏவி தம்மை முடக்க முயற்சி செய்வதாக முதல் மனைவி மீது நடிகர் ராஜ்கிரண் புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பணியாளர் முத்துகுமார் மூலம் முதல் மனைவி பர்வஷ் பீவி ஏவியதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். இதனை முன்கூட்டியே கண்டுபிடித்து பணியாளரை நீக்கினேன் என்று ராஜ்கிரண் தெரிவித்துள்ளார். இதனையடுத்து முத்துக்குமார் நீக்கப்பட்டதால் தமக்கு எதிராக போலீசில் கொலை முயற்சி புகார் அளித்துள்ளார் என்றும் ராஜ்கிரண் தெரிவித்துள்ளார். இந்நிலையில் முத்துகுமார் புகாரின் பேரில் ராஜ்கிரணிடம் போலீஸ் விசாரணை நடத்தியுள்ளது.
Source: Dinakaran
Post a Comment