கதையின் ஒரு வரியை கேட்டு செல்வராகவனுக்கு கால்ஷீட் கொடுத்த கமல்!

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

கதையின் ஒரு வரியை கேட்டு செல்வராகவனுக்கு கால்ஷீட் கொடுத்த கமல்!

2/8/2011 12:27:46 PM

“ஆயிரத்தில் ஒருவன்” படத்திற்கு பிறகு செல்வராகவன் விக்ரமுடன் ஒரு படம் பண்ணப்போவதாகவும், விஜய்யை வைத்து ஒரு படம் பண்ணப்போவதாகவும் செய்திகள் வெளியாயின. ஆனால் அந்த படங்களை எல்லாம் நிறுத்தி விட்டு, தன் தம்பி தனுஷை வைத்து ‘இரண்டாம் உலகம்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். ‘இரண்டாம் உலகம்’ படத்தின் ஷூட்டிங் நடந்து வரும் நிலையில், உலக நாயகன் கமலஹாசனை வைத்து ஒரு படம் இயக்கப் போகிறார். இதற்காக கமலிடம் கதை ஒன்றை கூறியுள்ளார் செல்வராகன். மேலும் செல்வராகவன் எழுதிய கதையின் ஒரு வரியை கேட்ட கமல், கால்ஷீட் கொடுக்க சம்மதித்திருக்கிறார். இதில் தீவிரவாதி வேடம் ஏற்கிறார் கமல். படத்தின் பெயர் மற்றும் ஷூட்டிங் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிகிறது.


Source: Dinakaran
 

Post a Comment