2/12/2011 11:58:36 AM
'நர்த்தகி' பட இயக்குனர் விஜய பத்மா கூறியது: சினிமாவில் திருநங்கைகள் கேலியாகச் சித்தரிக்கப்படுகின்றனர். அது தவறு. திருநங்கைகள்பற்றி ஆராய்ச்சி கட்டுரை எழுதியபோது அவர்களை சந்தித்தேன். படங்களில் தங்களை கேலியாக சித்தரிப்பதை சொல்லி மனம் குமுறுவார்கள். அந்த பாதிப்புதான் 'நர்த்தகி' என்ற படத்தை எடுக்க தூண்டியது. குடும்பத்தில் ஒரு திருநங்கை பிறந்துவிட்டாலே அவர்களை பெற்றோர்கள் கூட வெறுக்கத் தொடங்கி விடுகின்றனர். ஒரு இளவயது ஆண்மகன் மன உணர்வின் பாதிப்பில் கொஞ்சம் கொஞ்சமாக பெண்ணாக மாறிக்கொண்டிருப்பதை உணர்கிறான். இதனால் காதலித்தவளையே நிராகரிக்கத் தொடங்குகிறான். அவனுக்காகவே வாழ்ந்த அப்பெண் எடுக்கும் முடிவுதான் கதை. இதில் கல்கி என்ற திருநங்கை ஹீரோயினாக நடிக்கிறார்.
Post a Comment