2/14/2011 10:55:00 AM
பாவனா கூறியது: பட வாய்ப்பு குறைந்தால் உடனே கல்யாணம் என்று கதை கட்ட தொடங்கிவிடுகிறார்கள். அந்த வதந்திகளையெல்லாம் தாங்கிக் கொண்டேன். தமிழில் 'அசல்Õ படத்துக்கு பிறகு நடிக்கவில்லை. அதற்காக கோலிவுட் மீது எனக்கு எந்த புகாரும் இல்லை. அதே நேரம் தமிழ் சினிமாவில் எனக்கும் ஒரு காலம் வரும். ஏற்கனவே கன்னடத்தில் நடிக்க நிறைய வாய்ப்புகள் வந்தது. கன்னடம் தெரியாததால் ஒப்புக்கொள்ளாமல் இருந்தேன். புனித் ஹீரோவாக நடிக்கும் 'ஜாக்கிÕயில் கேட்டபோது ஒப்புக்கொண்டேன். பெரிய நடிகர் என்பதோடு கதையும் நன்றாக இருந்தது. அங்குள்ள ரசிகர்கள் ரசனை பற்றி தெரியாததால் படம் ஹிட்டாகுமா என்பது தெரியவில்லை. ஆனால் இப்படம் பெரிய ஹிட்டாகிவிட்டது. 2010ம் ஆண்டு மலையாளத்தில் 3 படங்களில் நடித்தேன். நன்றாக ஒடியது. கன்னடத்தில் சுதீப் படத்தில் நடிக்க கால்ஷீட் ஒதுக்கினேன். அவர் எடுக்கும் சொந்த படம் முடியாததால் இப்படம் தள்ளிப்போனது. பிரியதர்ஷன் படத்துக்கும் கால்ஷீட் கொடுத்திருந்ததால் சுதீப் படத்தில் நடிக்க முடியவில்லை. ஒரு கல்லூரி வளாகத்துக்குள் நடக்கும் கதையை பிரியதர்ஷன் என்னிடம் சொன்னபோது பிடித்திருந்தது. நடிக்க ஒப்புக்கொண்டேன். இதன் ஷூட்டிங் முழுவதும் துபாயில் நடக்க உள்ளது.
Post a Comment