2/24/2011 2:55:18 PM
நல்ல காலம் பொறக்குது…
நல்ல காலம் பொறக்குது…
இன்ஷியலுக்கு பெயர் மாறிய நடிகரு, இந்தி பட ரீமேக்குல நடிக்கிறாரு. அந்த படத்துக்கு ஹீரோயினை அவர்தான் செலக்ட் பண்ணுறாராம்… பண்ணுறாராம்… இயக்குனரும் அவரோட செலக்ஷன்தானாம். இந்த ரெண்டு கண்டிஷனுக்கும் தயாரிப்பு தரப்பு ஒத்துக்கிட்ட பிறகுதான் நடிக்கவே சம்மதிச்சாராம்… சம்மதிச்சாராம்…
செல்வ இயக்குனரு தம்பியை வச்சி படம் இயக்குறாரு. அந்த பட ஷூட்டிங்கை நிறுத்தி வச்சிட்டு, உலக ஹீரோ நடிக்கிற படத்துக்கு கதை எழுதுறதுல பிசியா இறங்கிட்டாராம்… இறங்கிட்டாராம்… ஷூட்டிங் நிக்குற படத்தை தயாரிக்கிற இயக்கத்தோட அப்பா, வருத்தப்படுறாராம்… வருத்தப்படுறாராம்…
கோலிவுட், டோலிவுட் அழைக்காததால கன்னட சினிமா பக்கம் போயிட்டாரு நமீ நடிகை. அங்கே ஹீரோக்களோடு நட்பை வளர்க்கிறாராம்… வளர்க்கிறாராம்… கன்னட தேசத்துல நம்பர் ஒன் நடிகையா மாறிக் காட்டப்போறேன்னு நெருங்கியவங்ககிட்ட சவாலும் விட்டிருக்கிறாராம்… விட்டிருக்கிறாராம்…
Post a Comment