‘நயன்தாராவோடு ஒப்பிடாதீங்க’ மேக்னா கோபம்

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

'நயன்தாராவோடு ஒப்பிடாதீங்க' மேக்னா கோபம்

2/15/2011 12:47:22 PM

'காதல் சொல்ல வந்தேன்' படத்தின் ஹீரோயின் மேக்னா கூறியது: நயன்தாராபோல இருப்பதாக என்னை அவரோடு ஒப்பிட்டு பலர் கூறுகின்றனர். அவர் தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக இருக்கிறார். அது உற்சாகம் அளித்தாலும் என் நடிப்பு ஸ்டைலும், அவர் ஸ்டைலும் வேறுவேறுதான். எனது நடிப்பில் எனது இயக்குனர்கள் திருப்தி அடைகிறார்கள். யாராலும் யார் இடத்தையும் நிரப்பிவிட முடியாது. தற்போது 'கள்ள சிரிப்பழகா' படத்தில் நடிக்கிறேன். சக்தி ஹீரோ. மெடிகல் காலேஜ் மாணவி வேடம் ஏற்கிறேன். இப்படத்தை நகைச்சுவை மிகுந்த ஸ்கிரிப்டாக உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் ஜீவா. காமெடி காட்சிகளில் சூழலுக்கு ஏற்ப பேசி அசத்துகிறார் சக்தி. அவருக்கு ஈடுகொடுக்க நானும் முயற்சி எடுத்து நடிக்கிறேன். தொடர்ந்து நந்தா நந்திதா, காதல் வேதம், உயர் திரு 420 ஆகிய படங்களில் நடிக்கிறேன்.


Source: Dinakaran
 

Post a Comment