2/9/2011 12:02:23 PM
நாகார்ஜுனா, பிரகாஷ்ராஜ் நடிப்பில் உருவாகியுள்ள Ôபயணம்Õ படம் வரும் வெள்ளிக்கிழமை ரிலீசாக இருந்தது. இப்படத்துக்கு தடை விதிக்கக் கோரி சென்னையை சேர்ந்த பைனான்சியர் மகேந்திரகுமார் ஜெயின் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நீதிபதி ராமசுப்பிரமணியம் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பாக வக்கீல் அப்துல்ஹமீத் ஆஜராகி, ÔÔபயணம்Õ பட தயாரிப்புக்காக மகேந்திரகுமாரிடமிருந்து பிரகாஷ்ராஜ் ரூ. 50 லட்சம் கடன் வாங்கியுள்ளார். இந்தப் பணத்தை த¤ருப்பி தரும்வரை படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்Õ என்றார். இதை நீதிபதி ஏற்றுக் கொண்டு, Ôரூ. 50 லட்சத்துக்கான வங்கி உத்தரவாதம் அல்லது ரொக்கத்தை கொடுத்துவிட்டுதான் படத்தை திரையிட வேண்டும். அதுவரை படம் வெளியிட தடை விதிக்கப்படுகிறதுÕ என உத்தரவிட்டார்.
Post a Comment