2/23/2011 10:30:20 AM
தனது பெயரில் இணையதளம் தொடங்கியுள்ளார் பாமா. ரசிகர்களோடு நேரடியாக தொடர்பு கொள்ளவும், சமூக பிரச்னைகளில் தனது கருத்தை பதிவு செய்யவுமே இணையதளம் தொடங்கியுள்ளதாக கூறுகிறார். மேலும் அவர் கூறியதாவது: நீண்ட இடைவெளிக்குப் பிறகு 'சேவற்கொடி' என்ற படத்தில் நடித்திருக்கிறேன். இந்தப் படத்திற்காக 25 நாட்கள் திருச்செந்தூர் பகுதி கிராமங்களில் தங்கியிருந்து நடித்தேன். சினிமா படப்பிடிப்புக்காக அந்த பகுதி மக்கள் கொடுத்த ஒத்துழைப்பை எங்கும் பார்த்ததில்லை. படப்பிடிப்பு முடிந்ததும் படம் வெற்றி பெற கிராம மக்கள் திரண்டு வந்து கோவிலில் விசேஷ பூஜை நடத்தியது மறக்க முடியாத அனுபவம். கிராமத்திலிருந்து நகரத்திற்கு படிக்கச் செல்லும் கேரக்டர். இந்த படம் எனக்கு தமிழில், ரீ என்ட்ரி கொடுக்கும் என்று நம்புகிறேன். கவர்ச்சியாக நடிக்க தயங்குவதால்தான் தமிழ் பட வாய்ப்புகள் வருவதில்லை என்று சொல்வதில் உடன்பாடில்லை. மலையாளத்திலிருந்து அறிமுகமான நதியா, ரேவதி போன்றவர்கள் கடைசி வரை கவர்ச்சியாக நடிக்கவில்லை. அதேபோலத்தான் நானும் கவர்ச்சி வேண்டாம் என்று முடிவு செய்திருக்கிறேன்.
Post a Comment