கருந்தேள் காட்டில் திக்...திக்...திக்...

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

கருந்தேள் காட்டில் திக்… திக்… திக்…

2/12/2011 11:54:39 AM

'வந்தான் வென்றான்' படம் பற்றி இயக்குனர் கண்ணன் கூறியது: ஜீவா, டாப்ஸி நடிக்கும் இதன் ஷூட்டிங் கேரளா, கர்நாடக எல்லையில் உள்ள காட்டுப்பகுதியில் 23 நாட்கள் நடந்தது. காடுகளுக்குள் ஷூட்டிங் நடத்த அனுமதி வாங்கியபோது அங்கிருந்த அதிகாரிகள், 'கருந்தேளும், அட்டைகளும் நிறைந்த இடம். தேள்கள் கடித்தால் உயிருக்கு ஆபத்து ஏற்படும்' என்று எச்சரித்தனர். இதனால் உஷார் ஆனோம். 2 டாக்டர்களையும் கையோடு அழைத்துக்கொண்டு காடுகளுக்குள் சென்றோம். அங்கிருந்த அணைப் பகுதியின் சரிவில் மரத்தால் வீடு அமைக்கப்பட்டது. இதற்கு அடித்தளம் எதுவும் இல்லாததால் 10 பேருக்கு மேல் மரவீட்டுக்குள் செல்லக்கூடாது என்று ஆர்ட் டைரக்டர் கூறி இருந்தார். ஆனால் ஜீவாடாப்ஸியின் பாடல்காட்சியை அதற்குள்தான் படமாக்கினோம். மொத்த யூனிட்டும் அந்த வீட்டுக்குள் இருந்ததுடன் டிராலி, கேமரா சகிதமாக உள்ளே ஐக்கியமாகிவிட்டோம். ஆனால் எதையுமே அசைக்காமல் ஒவ்வொருவரும் பூனைபோல் நடந்துதான் வேலைகள் பார்த்தோம். பல இடங்களில் தேள், அட்டைகளைப் பார்த்தோம். ஆனால் எந்த பாதிப்பும் இல்லாமல் ஷூட்டிங் நடத்தினோம். டாப்ஸியை பயமுறுத்துவதற்காக ஜீவா, அங்கிருக்கும் சிறுகுச்சிகளை அவர் மீது எறிந்து, தேள் தேள் என்று பயமுறுத்துவார்.


Source: Dinakaran
 

Post a Comment