2/23/2011 3:12:17 PM
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படம் ராணா; படப்பிடிப்பு மார்ச் மாதம் தொடங்குகிறது. ஆக்கர் ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து ஈராஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் 'ராணா' என்ற பெயரில் புதுப்படம் தயாரிக்கிறது. இந்த படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த முத்து, படையப்பா படத்தை இயக்கிய கே.எஸ்.ரவிக்குமார் இயக்குகிறார். படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். ரத்தினவேலு ஒளிப்பதிவும். பட தொகுப்பை ஆன்டணியும் கவனிக்கின்றனர். ராணா படத்தில் ரஜினிக்கு ஜோடியாக தீபிகா நடிக்கிறார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். ரஜினியின் ஒரு கதாபாத்திரத்துக்கு ஜோடியாக மாதுரி தீட்சித் நடிக்க வேண்டியிருந்ததாம். ஆனால் தன்னுடைய குடும்பத்தை பார்க்க அமெரிக்கா செல்வதால் ரஜினியுடன் ‘ராணா’ படத்தில் நடிக்கும் வாய்ப்பை இழந்திருக்கிறார் மாதுரி தீட்சித். இதனையடுத்து ராணா படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க சினேகாவிடம் பேசி வருகிறார்கள். ஏற்கெனவே ரஜினி மகள் சௌந்தர்யாவின் ஆக்கர்ஸ் ஸ்டுடியோ தயாரித்த கோவா படத்தில் நாயகியாக நடித்தவர் சினேகா. எனவேதான் மீண்டும் சினேகாவையே அணுகியுள்ளனராம்.
Post a Comment