பூர்ணா என் தோழி

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

பூர்ணா என் தோழி

2/14/2011 10:54:18 AM

ஆதி கூறியது: ஒரு பெரிய குடும்பத்துக்குள் காதல் நுழைகிறது. அதனால் ஏற்படும் பிரச்னைகள் Ôஆடு புலிÕ படத்தின் கதை. பிரபுவின் மகனாக நடிக்கிறேன். ஜோடியாக பூர்ணா நடிக்கிறார். சென்னை, கும்பகோணம், புதுச்சேரியில் ஷூட்டிங் நடந்தது. பூர்ணாவுடன் நெருக்கமாக பழகுகிறீர்களே என்கிறார்கள். இப்படம் மூலம் இருவரும் பிரெண்ட்ஸ் ஆகிவிட்டோம். முதல்முறை சந்தித்தபோது நீண்ட நாள் பழகியவர்போல் மனம்விட்டு பேசினார். இந்த பழக்கத்தால் இருவருக்கும் படத்தில் கெமிஸ்ட்ரி நன்கு ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. மற்ற படங்களைவிட இப்படத்தில் ஹீரோயினுடன் நிறைய ரொமான்ஸ் சீன் உள்ளது. எல்லா அம்சமும் கொண்ட கமர்ஷியல் படமாக இயக்கி இருக்கிறார் விஜய் பிரகாஷ்.

அடுத்து வசந்தபாலன் இயக்கும் 'அரவான்Õ படத்தில் நடிக்கிறேன். 18ம் நூற்றாண்டில் நடக்கும் கதை. சிக்ஸ் பேக் உடற்கட்டுடன் கூடிய இளைஞன் வேடம். தொடை தெரிய கச்சம் கட்டும் பாணியில் வேட்டி கட்டி நடிக்கிறேன். இக்கதைக்காக வரலாற்று ரீதியாக இயக்குனர் நிறைய ஆராய்ச்சி செய்திருக்கிறார். கமர்ஷியல் படம் பிடிக்கிறதா? ஆர்ட் படம் பிடிக்கிறதா? என்கிறார்கள். இரண்டிலுமே நடிக்க எனக்கு ஆசை. தெலுங்கு படத்தில் நடிக்க கேட்கிறார்கள். ஹீரோவாக வாய்ப்பு வந்தால் நடிப்பேன். இப்போதைக்கு தமிழில்தான் முழு கவனம் செலுத்துவேன்.


Source: Dinakaran
 

Post a Comment