2/19/2011 12:45:57 PM
தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வருபவர் ரீமா சென். இவருக்கும் டெல்லியை சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கும் காதல் என அடிக்கடி செய்திகள் வெளியாயின. ஆனால், இதை ரீமா மறுத்து வந்தார். இந்நிலையில் காதலிப்பதை ஒப்புக்கொண்டுள்ளார் ரீமா சென். அவர் கூறியதாவது: எனக்கு திருமணமாகி விட்டது என்பதில் உண்மையில்லை. டெல்லி தொழிலதிபர் ஷிவ் கரண் சிங் என் நண்பர். கடந்த சில மாதங்களாக நாங்கள் நண்பர்களாகப் பழகி வந்தோம். கடந்த புதன்கிழமை டெல்லியில் உள்ள அவரது ஓட்டலில் இரவு விருந்துக்கு அழைத்திருந்தார். இதில் எனது நண்பர்களும் கலந்துகொண்டனர். அப்போது திடீரென்று, என்னைத் திருமணம் செய்து கொள்வாயா?' என்று கேட்டார். இதை நான் எதிர்பார்க்கவில்லை. இருந்தாலும் உடனே ஒப்புக் கொண்டேன். அடுத்த நிமிடமே, தயாராக வைத்திருந்த வைர மோதிரத்தை அவர் எனக்குப் பரிசளித்தார். இதுதான் நடந்தது. திருமண நிச்சயதார்த்தம் எதுவும் நடக்கவில்லை. இவ்வாறு ரீமா சென் கூறினார். ஷிவ் கரண் சிங்குக்கு ஏராளமான ஓட்டல்கள் உள்ளன. அவர் கூறும்போது, 'ரீமாவை ரொம்ப நாட்களாக தெரியும். எங்கள் திருமண நாள் குறித்து இருவீட்டு பெற்றோரும் முடிவு செய்வார்கள்' என்றார்.
Post a Comment