2/3/2011 3:38:50 PM
நல்ல காலம் பொறக்குது…
நல்ல காலம் பொறக்குது…
பிரகாச ஹீரோவை வச்சு திரும்பவும் படம் இயக்க பிளான் பண்ணினாராம் வர்மாவான இயக்கம். இதுக்காக நடிகர்கிட்ட பேசினாராம்… பேசினாராம்… இப்போதைக்கு கால்ஷீட் இல்லைன்னு நடிகரு எஸ் ஆயிட்டாராம்… ஆயிட்டாராம்…
தெலுங்கு நாக ஹீரோவின் வாரிசோடு நடிக்கிறாரு கல்லூரி நடிகை. வெளிநாட்ல ஷூட்டிங் நடந்தப்போ, நடிகரும் நடிகையும் ரொம்பவே நட்பாயிட்டாங்களாம்… நட்பாயிட்டாங்களாம்… விஷயம் தெரிஞ்ச அப்பா நடிகரு, மகனை கண்காணிக்க ரெண்டு பேரை ஷூட்டிங் ஸ்பாட்ல உலவ விட்டிருக்கிறாராம்… விட்டிருக்கிறாராம்…
சின்ன பட தயாரிப்புங்க கால்ஷீட் கேட்டா, விமலான நடிகரு அதிகமா சம்பளம் கேட்டு மிரட்டுறாராம்… மிரட்டுறாராம்… அதோடு கேரவேன், அது இதுன்னு நிறைய கண்டிஷன்கள் போடுறாராம்… போடுறாராம்… நடிகரை பற்றி கோடம்பாக்கத்துல சொல்லி, தயாரிப்புங்க புலம்புறாங்க… புலம்புறாங்க…
Post a Comment