2/8/2011 5:42:49 PM
பிரபுதேவா இயக்கிய போக்கிரி, வில்லு இரண்டிலும் காமெடிப் பகுதியை கவனித்துக் கொண்டவர் வடிவேலு. ஆனால் விஷாலை வைத்து இயக்கும் படத்தில் வடிவேலுக்குப் பதில் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பவர் விவேக். ஜெயம் ரவி, ஹன்சிகா மோத்வானி நடித்த எங்கேயும் காதல் படத்தை இயக்கிய பிரபுதேவா, அடுத்து ஜிகே ஃபிலிம்ஸ் தயாரிப்பில் விஷால் நடிக்கும் படத்தை இயக்குகிறார். அவன் இவன் படத்தில் விஷால் பிஸியாக இருந்ததால் அவர் இல்லாமலே படப்பிடிப்பு தொடங்கியது. விஷாலுக்கு ஜோடி சமீரா ரெட்டி.
தற்போது அவன் இவன் படப்பிடிப்பு முடிவுக்கு வந்துள்ளதால் விரைவில் விஷால் நடிக்கும் காட்சிகளை பிரபுதேவா படமாக்கவுள்ளார். அவருடன் காம்பினேஷன் காமெடியில் விவேக் பங்குகொள்வார் என்பது லேட்டஸ்ட் தகவல்.
Post a Comment