2/5/2011 12:03:03 PM
பெங்காலி படத்தை இயக்கி, ஹீரோயினாக நடித்து வருகிறேன் என்றார் சாயாசிங். 'அனந்தபுரத்து வீடு' படத்துக்குப் பிறகு சாயா சிங்குக்கு தமிழில் வாய்ப்புகள் இல்லை. இப்போது அவர் பெங்காலி படத்தை இயக்கி வருகிறார். இதுபற்றி சாயா சிங் கூறியதாவது: சினிமாவில் நடிகையாக, வழக்கமான காதலையும் டான்சையும் மட்டுமே செய்து வந்தேன். அதனால், தேடி வந்த சில வாய்ப்புகளை மறுத்துவிட்டேன். சினிமாவில், நடிப்பின் அடுத்தக் கட்டமாக டைரக்ஷனை பார்க்கிறேன். இதில் எனது திறமையை நிரூபிக்க வேண்டும். படம் இயக்குவது சிறப்பாக இருக்கிறது. இது என் கனவு என்று கூட சொல்லலாம். என் கனவு நிறைவேற இப்போதுதான் நேரம் வந்திருக்கிறது. இதில் நானே ஹீரோயினாக நடிக்கிறேன். படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. தொடர்ந்து படம் இயக்குவேனா என்பது தெரியாது. கன்னடத்தில் சில வாய்ப்புகள் வந்துள்ளது. அங்கு நடிப்பேன். இவ்வாறு சாயா சிங் கூறினார்.
Post a Comment