3/21/2011 10:31:30 AM
ஸ்ரீசிவ செல்வநாயகி அம்மன் மூவிஸ் சார்பில் டிசிஎஸ் தயாரிக்கும் படம் 'கண்டேன்'. இதில் சாந்தனு ஹீரோ. அவர் ஜோடியாக ரேஷ்மி நடிக்கிறார். படத்தை இயக்கும் ஏ.சி.முகில் கூறியதாவது: ஆயிரம் பொய் சொல்லி கல்யாணம் செய்து வைக்கலாம் என்று சொல்வார்கள். ஆனால், காதலுக்காக லட்சம் பொய் சொல்லலாம் என்பது இந்தப் படத்தின் கதை. சாந்தனு இப்படி பல பொய்கள் சொல்லி எப்படி ரேஷ்மியை காதலிக்கிறார் என்பது திரைக்கதை. இந்தப் படத்தில் காதலுக்கும் காமெடிக்கும் முக்கியத்துவம் கொடுத்துள்ளோம். சந்தானம் தனி டிராக்காக இல்லாமல் படம் முழுவதும் வருவது போல கதை அமைக்கப்பட்டுள்ளது. மலேசிய தமிழிசை பாப் பாடகர் பர்ன், எழுதி, பாடியுள்ள பாடலுக்கு அவரே நடித்துள்ளார். படம் முடிந்துவிட்டது. அடுத்த மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு முகில் கூறினார்.
Post a Comment