3/12/2011 11:56:30 AM
பிருத்விராஜுடன் மம்தா நடித்துள்ள மலையாள படமான 'அன்வர்' தமிழில் டப் செய்யப்பட்டுள்ளது. இந்தப் படம் பற்றி மம்தா கூறியது:
கமர்சியல் வெற்றிதான் ஹீரோயின் திறமைக்கு உத்தரவாதம் என்பதை நம்பவில்லை. 'அன்வர்' படம் கோவை வெடிகுண்டு சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட கதை. இக்கதையால் ஈர்க்கப்பட்டதால் நடிக்க ஒப்புக்கொண்டேன். படத்தின் வெற்றி, தோல்வியை கணக்கில் எடுக்காமல் குறிப்பிட்ட நடிகர், நடிகையின் நடிப்பை வைத்தே அவர்களின் திறமையை கணிக்கிறார்கள் மலையாள ரசிகர்கள். அந்த வகையில் என்னை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். இப்போதுள்ள வெற்றிகரமான கமர்சியல் ஹீரோயின்களைவிட என்னால் இன்னும் பிரகாசிக்க முடியும். நல்ல ஸ்கிரிப்ட் வந்தால் மட்டுமே ஒப்புக்கொள்வேன். என்னைப் பொறுத்தவரை வாழ்க்கையில் பிரச்னை என்று வந்தால் கூட அதை சிரித்துக்கொண்டே ஏற்றுக்கொள்வேன். வாழ்க்கையை அதன் போக்கில் வாழ விரும்புகிறேன்.
Post a Comment