3/14/2011 12:48:52 PM
'சிங்கம் புலி' படத்தில் ஒரு பாடலை நீக்கியுள்ளதாக அதன் இயக்குனர் சாய்ரமணி கூறினார். அவர் மேலும் கூறியதாவது: 8 வருடங்களுக்கு முன்பே இந்தப் படத்தின் கதையை தயார் செய்து வைத்திருந்தேன். பல ஹீரோக்களிடம் சொல்ல முயற்சித்தும் நடக்கவில்லை. கதை கேட்ட சில ஹீரோக்கள் வில்லனாக நடிக்க தயக்கம் காட்டினார்கள். அதனால் அண்ணன், தம்பி கதையை இரட்டைவேட கதையாக மாற்றினேன். சில ஹீரோக்களுக்கு பிடித்திருந்தது. கால்ஷீட் இல்லை. கடைசியில் சூப்பர்குட் சவுத்ரி தெலுங்கு ஹீரோ ரவிதேஜாவுக்கு சொல்லச் சொன்னார். ஆனால் அவரை சந்திக்க முடியவில்லை. பிறகு ஜீவா கதை கேட்டார். உடனே ஒப்புக்கொண்டா£ர். படம் நீளமாக இருக்கிறது என்று பலரும் சொன்னதால் ஒரு பாடல் காட்சியை நீக்கி இருக்கிறோம். இதே கதையை தெலுங்கு, இந்தியில் உரிமம் கேட்கிறார்கள். அதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
Post a Comment