3/15/2011 11:43:59 AM
சினேகா கூறியது: குடும்ப பாங்காகவும் காதல் நாயகியாகவும் என்னை பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில் விஜயசாந்தி நடித்த 'வைஜெயந்தி ஐபிஎஸ்Õ ரீமேக்கான 'பவானிÕ படத்தில் நடிக்க கேட்டு கதை சொல்ல வந்தார் இயக்குனர் கிச்சா. ஆச்சர்யமாக இருந்தது. 'இது போல் நடித்ததில்லை. இந்த வேடத்தை 100 சதவீதம் சரியாக செய்ய முடியுமா?Õ என்று தெரியவில்லை என தயங்கினேன். ஆனால் எனக்கு நம்பிக்கையூட்டினார் இயக்குனர். என் மீது அவர் நம்பிக்கை வைத்திருக்கும்போது எனக்கே தைரியம் வந்தது. போலீஸ் வேடத்தில் நடிப்பதற்கு முன் எப்படியெல்லாம் அதற்கான பயிற்சி தேவை என்பதை கேட்டறிந்து பயிற்சி பெற்றேன். ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜூலி நடித்த 'லாரா கிரஸ்ட்Õ, Ôடாம்ப் ரெய்டர்Õ ஆகியவை அவரை ஒரே இரவில் ஆக்ஷன் ஹீரோயினாக ரசிகர்கள் மனதில் பதிய வைத்த படங்கள். அவை இரண்டையும் குறைந்தது ஆறு முறை பார்த்தேன். அதன்பிறகே என் மேல் நம்பிக்கை வந்தது. பிறகு ஒப்புக்கொண்டேன். முதல்நாள் ஷூட்டிங்கில் வரவழைத்துக்கொண்ட தைரியத்தை கிளைமாக்ஸ் வரை மனதில் நிறுத்திக் கொண்டேன். தற்போது இதுபோல் நிறைய படங்களில் நடிக்க வாய்ப்பு வருகிறது. ஆனால் ஆக்ஷன் ஹீரோயினாக தொடர்ந்து நடிப்பதற்கு முழுமையாக தயாராக நேரம் தேவைப்படுகிறது.
Post a Comment