கணவரை பிரிந்தேனா?பூமிகா கொதிப்பு

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

கணவரை பிரிந்தேனா? பூமிகா கொதிப்பு

3/9/2011 10:01:59 AM

சொந்தமாக தயாரித்த படம் தோல்வியடைந்ததால் கணவர் பரத் தாகூரை, பூமிகா பிரிந்துவிட்டார் என்றும் கணவர் மீது, கொடுமைப்படுத்தியாக போலீசில் புகார் கொடுத்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இதுபற்றி பூமிகாவிடம் கேட்டபோது, கூறியிருப்பதாவது: என் கணவர் இல்லாமல் தனியாக நான் வெளியூர் அல்லது வெளிநாடு சென்றால் உடனே கணவரைப் பிரிந்துவிட்டதாக அர்த்தமா? அதுமட்டுமில்லாமல் எப்போதும் அவர் என் அருகிலேயே இருக்க முடியுமா? எப்படி தவறான செய்திகள் பரவுகிறது என்பது தெரியவில்லை. இந்த மாதிரியான செய்திகள் ஆச்சர்யமாகவும் அதிசயமாகவும் இருக்கின்றன. பரத் எனது பணத்தை எடுத்துக்கொண்டதாகவும், கணவரால் கொடுமைப்படுத்தப் பட்டதாகவும் லேட்டஸ்ட் தகவல்கள் வந்துள்ளன. எனது குடும்பம் கடந்த வருடம் பெரும் கார் விபத்தை சந்தித்தது. இதில் எனது அம்மா இன்னும் உடல் நலமில்லாமல் இருக்கிறார். அவருக்கு இருதய நோய். அவரைப் பார்ப்பதற்காக மும்பையில் இருக்கிறேன். உடனே, விவாகரத்து கேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளதாகவும், பரத் மீது போலீசில் புகார் செய்துள்ளதாகவும் செய்திகள் வருகிறது. பெற்றோரை பார்த்துக்கொள்வதற்காக வீட்டில் இருக்க கூடாதா? போலீசில் புகார் கொடுத்திருந்தால் எந்த போலீஸ் ஸ்டேஷனில் கொடுத்தேன் என்பதை நிரூபிக்க முடியுமா? இரண்டு பேரும் காதலித்தார்கள். ஆனால், ஆரம்பம் முதலே இருவருக்கும் ஒத்துப்போகவில்லை என்றும் சொல்கிறார்கள். ஆமாம், நான் அமைதியானவள். அவர் கொஞ்சம் படபடப்பானவர். இதில் என்ன இருக்கிறது. இரண்டு பேருமே ஒரே எண்ணத்தில் ஒன்றுப்போல் இருந்தால் இன்னொருவர் எதற்கு? ஒருத்தர் மட்டுமே வாழ்ந்துவிட்டு போகலாமே? நான் சொந்தமாக தயாரித்த தெலுங்கு படம், 'தகிட தகிட' ஓடாததுதான் பிரச்னை என்றும் இதனால் ஏற்பட்ட பல கோடி ரூபாய் நஷ்டத்தால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது என்றும் கற்பனையாக கதை சொல்கிறார்கள். இதே படம் வெளியான நாளில் மேலும் இரண்டு படங்கள் ரிலீஸ் ஆனது. அந்த படங்களும் ப்ளாப் ஆயின. அதை ஏன் பேசமாட்டேன் என்கிறார்கள். படம் ஓடாததற்காக, கணவரை பிரிந்தேன் என்றால், இதைவிட வேடிக்கை வேறு ஏதாவது இருக்குமா? இவ்வாறு பூமிகா கூறியுள்ளார்.


Source: Dinakaran
 

Post a Comment