நல்ல படங்களுக்காக விட்டுக் கொடுக்கலாம்
3/28/2011 11:48:57 AM
3/28/2011 11:48:57 AM
'சிங்கம் புலி' படத்தில் இரண்டாவது ஹீரோயினாக நடித்திருந்தார் சவுந்தர்யா. இவர் நடித்த பல காட்சிகள் படத்தில் நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுபற்றி சவுந்தர்யா கூறியதாவது: நான் நடித்த சில காட்சிகள் படத்தில் இல்லை. ஆனால் அதற்காக வருத்தப்படவில்லை. நல்ல கேரக்டரில் நடித்திருக்கிறேன். நல்ல படங்களில் நடிக்கும்போது இதுபோன்ற விட்டுக் கொடுத்தல் சகஜம்தான். இப்போது தமிழில் 'காந்தர்வன்', 'மல்லுக்கட்டு' படத்தில் நடித்து வருகிறேன். ஒன்றில் கிராமத்து பெண், மற்றொன்றில் நகர்புறத்து கல்லூரி மாணவி. தமிழ் சினிமாவில் நல்ல இடத்தை பிடிக்க நீண்ட நாள் போராடும் நடிகைகளில் நானும் ஒருத்தி. அதனால் படங்களை தேர்வு செய்வதில் கவனமாக இருக்கிறேன்.
Source: Dinakaran
Post a Comment