3/10/2011 11:32:54 AM
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் பெங்களூர் அணியின் விளம்பர தூதராக மைதானத்துக்கு வந்து வீரர்களுக்கு ஆதரவு தெரிவித்து வந்தார் கேத்ரினா கைப். கடந்த ஆண்டும் போட்டிகளின் ஆரம்பத்தில் வந்தார். இடையில் காணாமல் போய்விட்டார். அவருக்கு பதில், பெங்களூர் அணி ஆடிய ஆட்டங்களின்போது தீபிகா படுகோனை மைதானத்தில் பார்க்க முடிந்தது. இந்நிலையில், Ôஇந்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் போட்டியில் பங்கேற்க மாட்டேன்Õ என தெரிவித்திருக்கிறார் கேத்ரினா. Ôதொடர்ந்து பட ஷூட்டிங் இருப்பதால் நேரம் இல்லை. அதனால் பங்கேற்கவில¢லைÕ என்றும் அவர் காரணம் சொல்கிறார். ஆனால், Ôஉண்மையான காரணம் இது இல்லைÕ என்கிறது பாலிவுட் வட்டாரம். பெங்களூர் அணியின் உரிமையாளர் விஜய் மல்லையாவின் மகன் சித்தார்த்துடன் நெருங்கி பழகி வருகிறார் தீபிகா படுகோன். அதனால் கடந்த ஆண்டு பெங்களூர் அணி ஆடிய ஆட்டங்களுக்கு திடீர் விசிட் அடித்தார் தீபிகா. அவரே அந்த அணியின் திடீர் விளம்பர தூதராகவும் மாறிவிட்டார். இது கேத்ரினாவுக்கு பிடிக்கவில்லையாம். இதனால் கடந்த ஆண்டே அவர் சில போட்டிகளில் பங்கேற்பதை தவிர்த்தார். இம்முறையும் தீபிகாவுக¢கே முக்கியத்துவம் தரப்படும் என்பதால் பெங்களூர் அணியிலிருந்து விலகும் முடிவை எடுத்திருக்கிறார் கேத்ரினா.
Post a Comment