மீண்டும் பின்னணி பாடுகிறார் தனுஷ்
3/10/2011 11:49:51 AM
ஏற்கனவே தொடங்கி பாதியில் கைவிட்ட இது மாலை நேரத்து மயக்கம் படத்தை தூசு தட்டி இரண்டாம் உலகம் என்ற பெயரில் பல மாற்றங்களுடன் உருவாக்கி வருகிறார் செல்வராகவன். தனுஷ், ஆண்ட்ரியா நடிக்கும் இந்தப் படத்துக்கு முதலில் இசையமைப்பதாக இருந்தது ஜி.வி.பிரகாஷ்குமார். ஆனால் தற்போது அவரது இடத்தை நிரப்பப் போகிறவர் யுவன் ஷங்கர் ராஜா. ‘இரண்டாம் உலகம்’ படத்தில் தனது தம்பி தனுஷை பாட வைக்க ஆசைப்பட்டாராம் செல்வா, இதற்கு யுவனும் ஒப்புக் கொண்டாராம். இதனையடுத்து விரைவில் பாடல் ஒலிப்பதிவு ஆகிறது. கடைசியாக ஆயிரத்தில் ஒருவன் படத்தில் தனுஷ் பாடிய பாடல் மெகா ஹட்டானது என்பது குறிப்பிடத்தக்கது.
Source: Dinakaran
Post a Comment