3/25/2011 12:05:33 PM
நல்ல காலம் பொறக்குது…
நல்ல காலம் பொறக்குது…
ஜெக இயக்குனரு காட்டன் வீர ஹீரோகிட்ட கதை சொன்னாராம்… சொன்னாராம்… முழு கதையும் கேட்ட நடிகரு, பதில் எதுவும் சொல்லலையாம். நொந்துபோன இயக்கம் திரும்பி வந்துட்டாராம். கதை பிடிக்கலேன்னா சொல்லி இருக்கலாம். பதிலே சொல்லலேன்னா என்ன அர்த்தம்னு இயக்கம் புலம்புறாராம்… புலம்புறாராம்…
பிரகாச வில்லன் நடிகரு கன்னட படம் தயாரிக்கிறாரு. இதுல நடிக்க சீல நடிகையை கேட்டாராம்… கேட்டாராம்… போன்ல நடிகரு கேட்டதும், தெலுங்குல பிசியா இருக்கேன். உங்க படத்துக்கு கால்ஷீட் இல்லேன்னு நடிகை சொல்லிட்டாராம். வில்லன் ஷாக் ஆயிட்டாராம்… ஆயிட்டாராம்…
ரம்ய நம்பி நடிகை திடீர்னு கவர்ச்சிக்கு மாற முடிவு பண்ணியிருக்காராம்… பண்ணியிருக்காராம்… வாய்ப்புகள் வரணும்னா கவர்ச்சியா நடிச்சே தீரணும்னு நட்பு நடிகைங்க அட்வைஸ் பண்ணினாங்களாம். முதல் கட்டமா கிளாமர் ஷூட் நடத்தியிருக்காராம். அதுக்கான ரெஸ்பான்ஸை பார்த்துட்டு கவர்ச்சிக்கு மாறுவாராம்… மாறுவாராம்…
Post a Comment