3/9/2011 10:07:34 AM
'திருத்தணி' படத்தில் நடித்து வரும் சுனேனா கூறியதாவது: தமிழில் ஹோம்லியான கேரக்டரில் நடித்து நல்ல பெயர் வாங்கியுள்ளேன். எந்தப் படத்திலும் கவர்ச்சியாக நடித்ததில்லை. அதற்காக கிளாமராக நடிக்க மாட்டேன் என்று சொல்லவில்லை. கிளாமரும் அழகாக இருக்க வேண்டும் என்பது எனது கருத்து. தமிழில் நடிப்பதற்கு முன்பு ஒரு தெலுங்கு படத்தில் நடித்திருந்தேன். அதிலும் ஹோம்லியான கேரக்டர்தான். அந்தப் படத்தை சென்னையில் வெளியிட்டவர்கள், நான் கவர்ச்சி வேடத்தில் நடித்திருப்பதுபோன்ற படங்களை வெளியிட்டு இருக்கிறார்கள். இதைக் கேள்விப்பட்டு வருந்தினேன். என் இமேஜை கெடுக்கும் முயற்சியாக இதை கருதுகிறேன். 'திருத்தணி' படத்தில் முதன் முறையாக காமெடி கேரக்டரில் நடித்திருக்கிறேன். பிறகு 'கதிர்வேல்' வெளிவர இருக்கிறது. தமிழில் எனக்கு இருக்கும் நல்ல பெயரை கடைசி வரை காப்பாற்றுவேன்.
Post a Comment