திவ்யாவுக்கு திடீர் தடை

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

திவ்யாவுக்கு திடீர் தடை

3/25/2011 12:01:33 PM

தாண்டம் தஷகுனம்Õ கன்னட படத்தில் நடித்தார் திவ்யா. Ôஇப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கு வர வேண்டும் என்றால் சம்பள பாக்கியை தர வேண்டும்Õ என தயாரிப்பாளருக்கு கண்டிஷன் போட்டார் திவ்யா. Ôபட விளம்பரத்துக்காக திவ்யா வருவது அவசியம் என்பதால் சம்பள பாக்கியை தந்துவிட்டேன். ஆனால் சொன்னபடி அவர் விழாவுக்கு வரவில்லை. என்னுடன் வாய்த்தகராற¤ல் ஈடுபடுகிறார்Õ என கன்னட தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்தார் தயாரிப்பாளர் கணேஷ். இதையடுத்து திவ்யா மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக கன்னட தயாரிப்பாளர்கள் அவசரமாக கூட்டம் நடத்தி ஆலோசித்தனர். இதற்கு நடிகர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்தது. இதற்கிடையே அதிரடி முடிவை எடுத்திருக்கிறது தயாரிப்பாளர் சங்கம். ÔÔதொடர்ந்து கன்னட பட உலகினருடன் பிரச்னையில் ஈடுபட்டு வருகிறார் திவ்யா. அதனால் இனி அவரை எந்த படத்துக்கும் ஒப்பந்தம் செய்யக்கூடாதுÕÕ எனக் கூறி, சங்க கூட்டத்தில் முடிவு எடுத்துள்ளனர். இந்த தடை நடவடிக்கையால் கன்னட தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம் இடையே மோதல் வெடிக்கும் சூழல் உருவாகியுள்ளது.


Source: Dinakaran
 

Post a Comment