விக்ரமுக்கு டாக்டர் பட்டம்
3/14/2011 12:41:03 PM
ஏராளமான வெற்றிப் படங்களில் ஹீரோவாக நடித்தவர், விக்ரம். இவருக்கு இத்தாலியிலுள்ள பல்கலைக்கழகம், கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது. பல்வேறு கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்ததற்காக, இந்த விருதை விக்ரமுக்கு வழங்குவதாக, இத்தாலி யுனிவர்சிட்டா பாப்புலேர் டெக்லி ஸ்டெடி டிமிலானோ பல்கலைக்கழக இயக்குனர்களும், செனட் உறுப்பினர்களும் தெரிவித்துள்ளனர். மே 29ம் தேதி, இத்தாலி யுனிவர்சிட்டியில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் விக்ரம் இந்தப் பட்டத்தை பெறுகிறார்.
Source: Dinakaran
Post a Comment