செல்வமணியின் அகிலா
3/23/2011 10:23:29 AM
3/23/2011 10:23:29 AM
நீண்ட இடைவெளிக்குப் பிறகு 'அகிலா' என்ற படத்தை இயக்குகிறார் ஆர்.கே.செல்வமணி. இதில் ஆனந்தன் என்ற வழக்கறிஞ்சர் ஹீரோ. பெங்களூர் மாடல் ஹுதாசா ஹீரோயின். பஞ்சு அருணாசலம் பாடல்கள் எழுதுகிறார். ஆதித்யன் இசை. கணேஷ்ராம் ஒளிப்பதிவு. படம் பற்றி ஆர்.கே.செல்வமணி கூறியதாவது: அரசுக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நசுக்கப்படும் அப்பாவி மக்கள் பற்றிய கதை. எனது முந்தைய படங்கள் போன்று இதுவும் நிஜ சம்பங்களின் அடிப்படையிலானது. அந்த சம்பவம் எது என்பதை இப்போது சொல்ல இயலாது. முதல் கட்டமாக சென்னையில் நாளை (இன்று) படப்பிடிப்பு தொடங்குகிறது. இரண்டாவது கட்ட படப்பிடிப்புகள் மேற்கு வங்கம், உத்ராஞ்சல், ஜார்கண்ட் பகுதிகளில் நடக்கிறது.
Source: Dinakaran
Post a Comment