3/16/2011 5:39:15 PM
'கனா கண்டேன், 'மொழி, 'நினைத்தாலே இனிக்கும், 'அபியும் நானும் என கோலிவுட்டில் அவ்வப்போது தலைகாட்டும் பிருத்விராஜ், மலையாளத்தில் மம்முட்டி, மோகன்லாலுக்கு போட்டி ஹீரோவாக வலம் வருகிறார். சந்தோஷ் சிவன் இயக்கத்தில் 'உருமிÕ படத்தில் நடித்துள்ளார். விரைவில் இந்தி படமொன்றிலும் நடிக்கிறார்.பிருத்விராஜ் உடன் நடிக்கும் ஹீரோயின்களுடன் அடிக்கடி காதல் கிசுகிசுக்களில் சிக்குவார். தற்போது மீண்டும் பரபரப்பான காதல் கிசு கிசுவில் சிக்கி இருக்கிறார் பிருத்வி. ஒரு வருடத்துக்கு முன்பு டிவி நிகழ்ச்சிக்காக பேட்டி காண வந்த பெண் நிருபரை சந்தித்ததும் காதலில் விழுந்தாராம் பிருத்வி. அந்த பெண் மும்பைவாசி. இது பற்றிய ரகசியம் வெளிவராமல் இருப்பதற்காக வார இறுதி நாட்களில் மும்பைக்கு ரகசிய விசிட் அடித்துக் கொண்டிருந்தார் பிருத்வி. இந்த ரகசிய காதல், இப்போது மல்லுவுட்டில் லீக் ஆகி இருக்கிறது. விஷயம் பிருத்வியின் அம்மாவுக்கு தெரிந்ததும் அவரும் பச்சை கொடி காட்டிவிட்டாராம். ஏப்ரல் மாதம் காதலியுடன் திருமணம் நடக்கிறது. பிறகு திருவனந்தபுரத்தில் ஊர் அறிய திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டிருக்கிறாராம் பிருத்வி.
Post a Comment