3/9/2011 11:43:28 AM
த்ரிஷா கூறியது: என்னைப் பற்றி நிறைய வதந்தி பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். அதிலிருந்து மீண்டு வந்திருக்கிறேன். திருமணம் நடந்துவிட்டது என முதலில் சொன்னார்கள். கடந்த வாரம், எனக்கு நிச்சயதார்த்தம் மட்டும் நடந்துள்ளது என்றனர். இதையொரு வேலையாக சிலர் செய்கின்றனர். அதை பெரிதுபடுத்த விரும்பவில்லை. அதற்கு பயப்படவும் இல்லை. என்னைப் பற்றி என் பெற்றோருக்கும் நண்பர்களுக்கும் தெரியும். தற்போது தெலுங்கில் 'தீன்மார்Õ, தமிழில் 'மங்காத்தாÕ ஆகிய 2 படங்களில் நடித்து வருகிறேன். மேலும் 2 தெலுங்கு கதைகளை கேட்டிருக்கிறேன். தமிழில் சில கதைகளை கேட்டேன் பிடிக்கவில்லை. இந்தியில் நல்ல ஸ்கிரிப்ட் வந்தால் நடிப்பேன். 'விண்ணைத்தாண்டி வருவாயாÕ, 'மன்மதன் அம்புÕ போன்ற படங்களில் ஹோம்லி வேடம் ஏற்றதால் இனி கிளாமராக நடிக்க மாட்டீர்களா? என்கிறார்கள். அப்படி எந்த முடிவும் எடுக்கவில்லை. 'தீன்மார்Õ படத்தில் கிளாமர் வேடம்தான். இன்றைய காதலர்கள் எப்படி இருக்கிறார்கள். காதலை எவ்வளவு சாதாரணமாக எடுத்துக் கொள்கிறார்கள். பிடித்தால் சேர்ந்து இருப்பது, பிடிக்காவிட்டால் பிரிவது என இப்போதைய இளைஞர்கள் மத்தியில் பரவியிருக்கும் கலாசாரம் பற்றிய கதை. என்னைப் பொறுத்தவரை இப்போதைக்கு கிளாமர் வேடங்களுக்கு தடை போடமாட்டேன்.
Post a Comment