2/28/2011 2:58:46 PM
டைரக்டர் மிஷ்கின் கூறியது: ரசிகர்கள் மீது நிறைய நம்பிக்கை வைத்திருக்கிறேன். அதில் ஒருபோதும் ஏமாற்றம் அடைந்ததில்லை. வெவ்வேறு களங்களில் கதை அமைப்பதை வரவேற்கிறார்கள். சினிமாவில் ஏ, பி, சி என்று எந்த எல்லையும் இருப்பதாக நான் கருதவில்லை. 'நந்தலாலாÕ படத்தில் காமெடி, ஹீரோயிஸம் எதுவும் கிடையாது. ஆனாலும் படத்தை பாராட்டினார்கள். தமிழ் சினிமா வளர்ச்சிக்கு இது உதாரணம். அடுத்த ஸ்கிரிப்ட் முடித்துவிட்டேன். இதன் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகிறேன். இந்தியா, பாகிஸ்தான் சம்பந்தப்பட்ட மக்களின் பிரச்னை. ஆனால் நிச்சயமாக இது Ôவார்Õ படமாகவோ ராணுவ கதை கொண்ட படமாகவோ இருக்காது. இதில் இரண்டு ஹீரோக்கள். ஒருவர் ஜான் ஆப்ரகாம். மற்றொருவருக்கான தேர்வு நடக்கிறது. ஹீரோயினையும் தேடிக் கொண்டிருக்கிறேன். 'கமல்ஹாசனை இயக்கும் திட்டம் என்ன ஆனதுÕ என்கிறார்கள். அந்த திட்டத்தை கைவிட்டு விட்டேன். இனி அவருடன் இணையும் திட்டம் இல்லை. ஆனால் அவருக்காக எழுதிய கதையை ஹாலிவுட் படமாக எதிர்காலத்தில் இயக்குவேன். இவ்வாறு மிஷ்கின் கூறினார்.
Post a Comment