4/18/2011 11:49:06 AM
படம் இயக்க தயாரிப்பாளர்கள் கொடுத்த அட்வான்சை பெற்றுக் கொள்ள இயக்குனர் சித்திக் மறுத்துள்ளார். இந்தியில் 'பார்டிகார்ட்' படத்தை இயக்கி வரும் அவர் கூறியதாவது: இந்தி சினிமாவுக்கு வருவேன் என்று கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. முதல் படத்திலேயே சல்மான்கான், கரீனா கபூர், சத்ருகன் சின்ஹா ஆகியோரை இயக்குவதில் பெருமை. சல்மானுக்காக கதையில் சில மாற்றங்களை செய்திருக்கிறேன். இந்தியில் கொஞ்சம் கிளாமர் வேண்டும் என்பதால் கரீனாவை பயன்படுத்தியிருக்கிறேன். இந்த படம் முடிந்ததும் அடுத்து தமிழ் படம் இயக்குகிறேன். நிறைய தயாரிப்பாளர்கள் கதை, ஹிரோவை அப்புறம் முடிவு செய்து கொள்ளலாம் என்று அட்வான்ஸ் கொடுக்க முன்வந்தார்கள். எனக்கு அப்படி பெறுவதில் உடன்பாடு இல்லை. கதையும், ஹீரோவும் முடிவு செய்த பிறகு வாங்கிக் கொள்கிறேன் என்று மறுத்து விட்டேன்.
Post a Comment