வெற்றிக்காக போராடுகிறேன் : அசோக்!
4/18/2011 11:54:50 AM
4/18/2011 11:54:50 AM
'முருகா', 'பிடிச்சிருக்கு' படங்களில் ஹீரோவாக நடித்த அசோக், கூறியதாவது: நான் நடித்த இரண்டு படங்களிலுமே எனக்கு பாராட்டு கிடைத்தாலும் படங்கள் சரியாகப் போகவில்லை. அடுத்து, 'வானம் பார்த்த சீமையிலே' படத்தில் நடித்துள்ளேன். ஏதோ காரணங்களால் படம் வெளிவர தாமதமாகிறது. தற்போது 'கன்னிகாபுரம் ரெயில்வே கேட்', 'ஐந்தாம் வேதம்' படங்களில் நடித்து வருகிறேன். என்னதான் நடிப்பு திறமையை காட்டினாலும் ஒரு படத்தின் வெற்றிதான் நடிகனை அடையாளம் காட்டும். அந்த ஒரே ஒரு வெற்றிக்காகப் போராடிக் கொண்டிருக்கிறேன். இவ்வாறு அசோக் கூறினார்.
Source: Dinakaran
Post a Comment