4/20/2011 10:57:45 AM
ஆர்.கே நடிக்கும் 'புலிவேஷம்' படத்தில் வில்லனாக நடிக்கிறார் காமெடி நடிகர் எம்.எஸ்.பாஸ்கர். இதுபற்றி நிருபர்களிடம் அவர் கூறியதாவது: 'தெய்வத்திருமகன்' படத்தில் விக்ரமுடன் நடித்துள்ளேன். படத்தில் சாக்லெட் கம்பெனி டிரக் டிரைவர் கேரக்டர். 'வேலாயுதம்' படத்தில் விஜய்யின் தாய்மாமன் வேடம். 'எத்தன்' படத்தில் போலிச்சாமியாராக வருகிறேன். அடுத்து 'சடுகுடு', 'சிவா பூஜையில் கரடி' உட்பட ஏராளமான படங்களில் நகைச்சுவை வேடத்தில் நடிக்கிறேன். 'புலிவேஷம்' படத்தில், முதல்முறையாக வில்லன் வேடம் ஏற்றுள்ளேன். தனி காமெடி டிராக்கில் நான் நடிப்பதில்லை. டைரக்டர் உருவாக்கிய காமெடியில், மேலும் சுவாரஸ்யம் சேர்த்து நடிப்பேன். ஒரு படத்தின் வெற்றி, தோல்வி அதன் டைரக்டருக்கும், ஹீரோவுக்கும் சாதக, பாதகமாக அமைகிறது. காமெடி நடிகர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. ஆயிரக்கணக்கான படங்களுக்கு டப்பிங் பேசிய அனுபவம், இப்போது காமெடி செய்ய உதவுகிறது. கடைசிவரை காமெடி நடிகனாக இருக்கவே ஆசை.
Post a Comment