4/19/2011 4:02:02 PM
கமல் - செல்வராகவன் கூட்டணியில் உருவாகும் படத்துக்கு விரைவில் ஷூட்டிங் தொடங்க இருந்தது. இதற்கான ஏற்பாடுகள் ஜரூராக நடந்து வந்த நிலையில், படத்துக்கு திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஸ்கிரிப்ட் ரெடியான கையோடு இசை அமைப்பாளர் தேர்வும் நடந்தது. ஏற்கனவே கருத்துவேறுபாடு காரணமாக யுவன் சங்கர் ராஜாவிடம் இருந்து பிரிந்திருந்த செல்வராகவன் இப்படம் மூலம் இணைவதாக கூறப்பட்டது. இரு தரப்பிலும் பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்த நிலையில் திடீரென்று சங்கர் மகாதேவன் இசை அமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டார். மேலும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு தாமதமாகி வருகிறது. இதனால் திட்டமிட்டபடி ஷூட்டிங் தொடங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில் மலையாளத்தில் ராஜேஷ் பிள்ளை இயக்கிய 'டிராபிக்' என்ற படத்தை கமல் பார்த்தார். கதை பிடித்திருந்ததாம். உடனே அப்படத்தை தமிழில் ரீமேக் செய்ய ஐடியா கொடுத்ததுடன் செல்வராகவன் படத்தின் ஷூட்டிங் தொடங்குவதற்குள் இப்படத்தில் நடித்து முடிக்க முடிவு செய்தார். டிராபிக் போலீஸ் உள்ளிட்ட 3 பேரின் வாழ்க்கையை மையமாக வைத்து இக்கதை உருவாகி உள்ளது. போலீஸ் வேடத்தில் ஸ்ரீனிவாசன் நடித்திருக்கிறார். கதைக்கு மெயினான அப்பாத்திரத்தை தேர்வு செய்யாத கமல் மற்ற 2 பாத்திரங்களில் ஒரு பாத்திரத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்தார். இந்த படத்தின் ஷூட்டிங்குக்கான பணிகள் தொடங்கி உள்ளன.
Post a Comment