4/26/2011 12:07:09 PM
பவர் சோப் விளம்பரங்களில் நடிகை தமன்னாவின் படங்களையோ, வீடியோக்களையோ பயன்படுத்தக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. புதுச்சேரியைச் சேர்ந்த பவர் சோப் நிறுவனம், சென்னை தி.நகரைச் சேர்நத் ஜே அன்ட் டி கம்யூனிகேஷன் மூலமாக தனது நிறுவனத் தயாரிப்புகளுக்கு பிராண்ட் அம்பாசடராக செயல்பட அணுகியது. இதையடுத்து 2008ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இதுதொடர்பாக ஒரு ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த ஒப்பந்தம் 2009ம் ஆண்டு அக்டோபர் 6ம் தேதியுடன் முடிவடைந்து விட்டது.
ஆனால் ஒப்பந்த காலம் முடிவடைந்த பின்னரும் எனது அனுமதியின்றி எனது படங்களை தனது விளம்பரங்களில் அது பயன்படுத்தி வருகிறது. இதை தடை செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார் தமன்னா. இதை விசாரித்த நீதிபதி ராமசுப்ரமணியம், வருகிற ஜூன் 8ம் தேதி வரை பவர் சோப் விளம்பரங்களில் தமன்னாவின் படங்கள், வீடியோ கிளிப்பிங்குகளைப் பயன்படுத்த தடை விதித்து உத்தரவிட்டார்.
Post a Comment