4/20/2011 10:56:17 AM
அட்வான்ஸ் வாங்கிவிட்டு மலையாள படத்தில் நடிக்காததால் தயாரிபாளர் தொடர்ந்த வழக்கில் பிருத்விராஜ், மீரா ஜாஸ்மினுக்கு கோர்ட் சம்மன் அனுப்பியுள்ளது. கோழிக்கோடு பகுதியை சேர்ந்தவர் மோகன்தாஸ். இவர் கரிம்பில் பிலிம் என்ற தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார். நான்கு வருடங்களுக்கு முன்பு 'சுவப்ன மாளிகாÕ என்ற பெயரில் மலையாள படம் தயாரிக்க திட்டமிட்டிருந்தார். இதில் ஹீரோவாக பிருத்விராஜும், ஹீரோயினாக மீரா ஜாஸ்மினும் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தனர். இருவருக்கும் அட்வான்ஸ் தொகையாக தலா ணி5 லட்சம் கொடுக்கப்பட்டது. ஆனால் அதை வாங்கிக்கொண்டு அவர்கள் நடிக்கவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து பணத்தை திருப்பித் தரக் கோரி மோகன்தாஸ் வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார். மலையாள நடிகர் சங்கத்திலும் புகார் செய்தார். ஆனால் இருவரும் பணத்தை திருப்பிக் கொடுக்கவில்லை. இதையடுத்து, மோகன்தாஸ் கோழிக்கோடு தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் பிருத்விராஜ், மீரா ஜாஸ்மின் மீது வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி ஜான், மே 16-ம் தேதி பிருத்விராஜ், மீரா ஜாஸ்மின் நேரில் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்ப உத்தரவிட்டார்.
Post a Comment