4/22/2011 12:48:50 PM
நல்ல காலம் பொறக்குது...
நல்ல காலம் பொறக்குது...
ஜெயமான இயக்குனரு பஞ்ச் நடிகர் படத்தை முடிக்கிற ஸ்டேஜ்ல இருக்க¤றதால அடுத்து தல நடிகரை இயக்க பிளான் பண்ணிட்டாராம்... பண்ணிட்டாராம்... போன வாரத்துல திடீர்ன்னு நடிகரை சந்திச்சி பேசினாராம். ஒரு வரிக் கதையிலேயே நடிகரு நிறைய மாற்றங்கள் சொன்னாராம்... சொன்னாராம்... முழு கதையும் கேட்டா என்ன சொல்வாரோன்னு கோடம்பாக்கத்துல முணுமுணுக்கிறாங்க... முணுமுணுக்
கிறாங்க...
ஜேம்ஸான ஹாலிவுட் டைரக்டரை பார்த்துட்டேன்னு ராய் நடிகை போட்டோவை காட்டி பெருமையா பேச¤னாரு. அதை இன்னும் நிறுத்தலையாம்... நிறுத்தலையாம்... அதை பார்த்த பாவனமான நடிகையும் அதே டைரக்டரோடு சேர்ந்து எடுத்த போட்டோவை காட்டி, 'நானும்தான் அவரை சந்திச்சு பேசினேன். சீக்கிரமே தன்னோட படத்துல நடிக்க வைக்கிறது பற்றி பேசுறதா சொல்லி இருக்காருÕன்னு தன்னோட சகாக்கள்கிட்ட ரீல் விடுறாராம்... விடுறாராம்...
தாடிக்கார டாடி இயக்குற படத்துல கெஸ்ட் ரோல் பண்ணப்போறாரு இன்ஷியலுக்கு மாறிய நடிகரு. அப்பா படத்துக்கே கால்ஷீட் தராம இழுத்தடிக்கிறாராம்... இழுத்தடிக்கிறாராம்... மகனுக்கான பாட்டை ரெடி பண்ணிட்டு, அதை படமாக்க முடியாம அப்பா தவிக்கிறாராம்... தவிக்கிறாராம்...
Post a Comment