நடிகைக்கு தடை போட்ட டைரக்டர்
4/25/2011 12:46:42 PM
4/25/2011 12:46:42 PM
நல்ல காலம் பொறக்குது...
நல்ல காலம் பொறக்குது...
சோன நடிகை நாளுக்கு நாள் குண்டாயிட்டே போறாராம்... போறாராம்... படம் தயாரிச்சு முடிச்ச கையோடு நடிக்கலாம்ன்னு முடிவெடுத்தவருக்கு குண்டான உடல் தடையா இருக்காம்... இருக்காம்... இப்படியே விட்டா சரியா வராது. முதல்ல உடம்பை இளைக்க பாருங்கன்னு சிலர் அட்வைஸ் பண்றதால சீக்கிரமே வெளிநாட்டுக்கு போய் சிகிச்சை எடுக்கப்போறாராம்... எடுக்கப்போறாராம்...
விளம்பர படங்கள்ல நடிச்ச ஜனனியான நடிகையை மில்க் டைரக்டரு தன் படத்துல நடிக்க வச்சாரு... வச்சாரு... பட ஷூட்டிங் வரை எந்த விழாவுலேயும் கலந்துக்கக் கூடாது, விளம்பரத்துலேயும் நடிக்கக்கூடாதுன்னு நடிகைக்கு தடை போட்டாரு. ஷூட்டிங் முடிஞ்சு போச்சு. இப்போ ரிலீஸ் வரைக்கும் அந்த தடையை நீட்டிக்க¤றதா டைரக்டரு சொல்லிட்டாராம்... சொல்லிட்டாராம்... இதனால நடிகை வருத்தமா இருக்காராம்... இருக்காராம்...
பிரியமான இயக்குனரோட மலையாள படத்துல லட்சுமியான ராய் நடிகை நடிக்கிறாரு. இயக்குனரோடு நடிகை நட்பா இருக்கிறாராம்... இருக்கிறாராம்... மலையாள படத்தோடு பிரியமானவரின் இந்தி படத்துலேயும் வாய்ப்பு கேட்டிருக்கிறாராம். இயக்குனரும் ஓகே சொல்லியிருக்கிறாராம்... சொல்லியிருக்கிறாராம்...
Source: Dinakaran
Post a Comment