நார்வே சர்வதேச திரைப்பட விழாவில் ஆடுகளத்துக்கு அமோக வரவேற்பு!
4/26/2011 10:41:37 AM
4/26/2011 10:41:37 AM
சன் பிக்சர்ஸ் வெளியிட்ட ஆடுகளம் படத்துக்கு நார்வேயில் நடந்து வரும் தமிழ் சர்வதேச திரைப்பட விழாவில் அமோக வரவேற்பை தந்திருக்கிறார்கள் ரசிகர்கள். அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க ஆடுகளம் இரண்டாவது முறையும் திரையிடப்பட்டது. பொல்லாதவனுக்குப் பிறகு வெற்றிமாறன் இயக்கிய படம் ஆடுகளம். தனுஷ், தாப்ஸீ நடித்திருந்தனர். கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன் பிரமாதமான கேரக்டர் ஒன்றில் வாழ்ந்திருந்தார். இந்தப் படத்தை நார்வே வாழ் தமிழர்கள் மிகவும் ரசித்தனர். முதல்முறை பார்க்க முடியாதவர்கள் கேட்டுக் கொண்டதற்காக இரண்டாவது முறையும் படம் திரையிடப்பட்டது.
Source: Dinakaran
Post a Comment