ஹாலிவுட்டை ஈர்க்க கமல் ஐடியா!

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

ஹாலிவுட்டை ஈர்க்க கமல் ஐடியா!

4/26/2011 5:06:27 PM

சிரஞ்சீவி மகன் ராம் சரண் தேஜா நடித்த 'மகதீரா’, தமிழில் 'மாவீரன்’ பெயரில் டப்பிங் ஆகிறது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் பேசியது: ராம் சரணின் கடின உழைப்பு அவரது நடிப்பில் தெரிகிறது. சிரஞ்சீவியும் நானும் ஆழ்வார்பேட்டை சாலையில் ஷூட்டிங்கில் ஒன்றாக கலந்துகொண்ட காலத்தில் இவ்வளவு பெரிய இடத்துக்கு வருவோம் என்று நினைக்கவில்லை. ஆனால் அது இன்று நடந்திருக்கிறது. மும்பையில் மட்டும் ஷூட்டிங் நடப்பதுபோல் ஹாலிவுட்காரர்கள் நினைக்கிறார்கள். தமிழ்நாடு, ஆந்திரா, கேரளாவிலும் ஷூட்டிங் நடக்கிறது. பெரிய படங்கள் வருகின்றன என்பதை அவர்களுக்கு உணர்த்த வேண்டும். அதை ஞாபகப்படுத்த தமிழ் திரையுலகும், தெலுங்கு திரையுலகும் ஒன்றாக சேர வேண்டும். உலக வர்த்தகத்தில் பங்கு பெறாமல் இருப்பது நமது தவறுதான். அதற்காகவாவது நாம் கைகோர்க்க வேண்டும். தெலுங்கிலிருந்து ஒரு படையே தமிழுக்கு வந்திருக்கிறது. வருக என்று வரவேற்கிறோம்.


Source: Dinakaran
 

Post a Comment