4/25/2011 12:34:57 PM
கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்தை காதலிப்பதாக வந்த தகவலில் உண்மை இல்லை என்றார் ரியா சென். தமிழில் 'தாஜ்மஹால்' படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் ரியா சென். பின்னர் பிரசாந்துடன் 'குட்லக்'படத்தில் நடித்த அவர் பிறகு இந்திக்கு சென்றுவிட்டார். சமீபத்தில் இவரும் இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்தும் சில விழாக்களில் கலந்துகொண்டனர். இதையடுத்து இருவரும் காதலித்து வருவதாகவும் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் செய்திகள் வெளியாயின. இதை ஸ்ரீசாந்த் ஏற்கனவே மறுத்திருந்தார். இந்நிலையில் ரியா சென் தனது டிவிட்டர் இணையதளத்தில், 'கொச்சி ஐபிஎல் அணி பங்கேற்ற ஆட்டத்தில் நான் கலந்துகொண்டேன். இதற்காகவெல்லாம் காதல் வருமா என்ன? நான் ஸ்ரீசாந்தை காதலிக்கவில்லை. அது தவறான தகவல். இது தொடர்பான உங்கள் கற்பனைகளுக்கு கொஞ்சம் ஓய்வு கொடுங்கள்' என்று கூறியுள்ளார்.
Post a Comment