4/26/2011 10:31:28 AM
இளைய தளபதி விஜய் நடிக்கும் வேலாயுதம் படத்தை அவரது பிறந்த நாளன்று வெளியிடத் திட்டமிட்டுள்ளார் ரவிச்சந்திரன். விஜய் நடிக்கும் வேலாயுதம் படத்தில் அவருக்கு ஜோடியாக ஜெனிலியா மற்றும் ஹன்ஸிகா நடித்துள்ளனர். பாண்டியராஜன், சரண்யா மோகன், சந்தானமும் படத்தில் உண்டு. ஜெயம் ராஜா இயக்கியுள்ளார். படத்தின் 80 சதவீத படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இது குறித்து ஆஸ்கர் ரவிச்சந்திரன் கூறுகையில் 80 சதவீத படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இந்தப் படத்தில் பால்காரராக நடித்துள்ளார் விஜய். ஜெனிலியா பெண் பத்திரிகை நிருபராகவும், ஹன்ஸிகா விஜய்யின் காதலியாகவும் நடித்துள்ளனர். 5 பாடல்கள், 6 அதிரடி சண்டைகள் இடம்பெற்றுள்ளன. விஜய்யின் பிறந்த நாளன்று இந்தப் படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளோம்," என்றார்.
Post a Comment