4/30/2011 10:54:22 AM
பிகினி உடை அணிந்து நடிக்க தைரியமில்லை என்று பூர்ணா கூறினார். அவர் மேலும் கூறியதாவது: தமிழில் நந்தாவுடன் நடித்த 'வேலூர் மாவட்டம்' ஷூட்டிங் முடிந்து விட்டது. பார்த்திபனுடன் 'வித்தகன்' பாடல் காட்சி பாக்கி இருக்கிறது. தெலுங்கில் அல்லரி நரேஷுடன் 'சீம டப்பாகாய்' படத்தில் நடித்துள்ளேன். அடுத்த மாதம் ரிலீஸ். இதில் நான் கிளாமராக நடித்துள்ளதாகச் சொல்கிறார்கள். அதில் உண்மை இல்லை. இந்த ஷூட்டிங்கில் நான் அணிந்து நடிக்க வேண்டிய உடைகள் சம்பந்தமாக சிலரிடம் கருத்து வேறுபாடு ஏற்பட்டது உண்மை. தெலுங்கில், குறிப்பாக பாடல் காட்சியில் கவர்ச்சியாக நடிக்கச் சொல்வார்கள். நானும் ஒரு வரையறைக்குள் நடித்திருக்கிறேன். பிகினி உடையில் நடிப்பீர்களா என்கிறார்கள். அதற்கு துணிச்சல் வேண்டும். அது எனக்கு இல்லை.
Post a Comment