4/30/2011 1:53:09 PM
நல்லகாலம் பொறக்குது…
நல்லகாலம் பொறக்குது….
மோத்வானி நடிகைக்கு கோலிவுட், டோலிவுட்ல வாய்ப்புகள் வந்து கொட்டுறதால, மற்ற நடிகைங்க காதுல கன்னபின்னான்னு புகையாம்… புகையாம்… இதுல முக்கியமா, சீனியர் நடிகைகளுக்குதான் ஏகப்பட்ட புகையாம்… ‘இந்த கண், அந்த கண்ணு’ன்னு ஏகப்பட்ட கண் பட்டதுல, மோத்வானி நடிகைக்கு ரெண்டு நாளா உடல் சரியில்லாம போச்சாம்… போச்சாம்… இதனால எல்லா புகையும் ஆறணுங்கறதுக்காக, நடிகையும் அவரோட தாய்க்குலமும் ஏழுமலையானை சந்திச்சு சிறப்பு பிரார்த்தனை பண்ணிட்டு வந்திருக்காங்களாம்… வந்திருக்காங்களாம்…
பட் பட்டுனு வளர்ந்து வந்த தமன்ன நடிகைக்கு தமிழ்ல ஒண்ணும், தெலுங்குல ஒண்ணுமாகதான் படம் இருக்குதாம்… இருக்குதாம்… எப்படியாவது சம்பளத்தை குறைச்சு, மீண்டும் வாய்ப்பு வாங்கலாம்னு நினைச்சாலும் முடியலையாம்… முடியலையாம்… அதெப்படி திடீர்னு நம்ம மார்க்கெட் குறைஞ்சதுன்னு நடிகையும் அவரது அம்மாவும் யோசிச்சுட்டு இருக்காங்களாம்… ரூம்ல யோசிச்சுட்டு இருக்காங்களாம்…
ஒளிப்பதிவாள இயக்குனரோட கோவான படத்துல, மூணெழுத்து இன்ஷியலா பேரை சுருக்கி வச்சுக்கிட்ட ஹீரோ முதல்ல நடிக்க இருந்தாரு… திடீர்னு கதை சரியில்லைன்னு நடிகரு விலகிட்டாரு… விலகிட்டாரு… இப்ப படம் ஹிட்டானதுல இன்ஷியலு அப்செட்டாயிட்டாராம்… ஆயிட்டாராம்… ‘எங்க மிஸ்டேக் நடந்ததுன்னு தெரியலை’ங்கற மாதிரி நண்பர்கள்கிட்ட ரொம்ப வருத்தமா பேசிட்டிருக்காராம்… இன்ஷியல் பேசிட்டிருக்காராம்…
Post a Comment