நிச்சயதார்தத்தோடு நின்ற திருமணம்... 'திரும்ப வந்தார்' ரீமா!

|

Tags: break, Cinema, English, film, hotelier, impending marriage, long break, marriage, Reema, Sen, South, south cinema, speculations, summaryReema, suspense, telugu film


Reema Sen
செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவன் படம் ரிலீசான பிறகு காணாமல் போனவர்கள் இருவர். ஒருவர் படத்தின் நாயகி ரீமா சென்.

இன்னொருவர் அந்தப் படத்தின் தயாரிப்பாளர் ரவீந்திரன்!

இரண்டாமவர் திரும்ப வருவது கஷ்டம் என்பதால், அந்த விவகாரத்தை பின்னர் பார்க்கலாம்.

கிட்டத்தட்ட ஓராண்டு காலமாய் தெற்குப் பக்கமே தலைவைத்துப் படுக்காமலிருந்த ரீமா, இப்போதுதான் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அதுகூட மிகுந்த முயற்சியின் பலனாக கிடைத்ததாம்.

ஆனால் தமிழில் இல்லை, தெலுங்கில். டி ராமாநாயுடு தயாரிக்கும் இந்தப் படத்தை ஆதித்யா இயக்குகிறார். இதில் மூன்று ஹீரோக்கள் அறிமுகமாகிறார்களாம். ஆனால் ரீமா மட்டும்தான் ஹீரோயினாம். மலேசியாவில் ஒரு மாத காலம் படப்பிடிப்பு நடக்கிறதாம்.

மலையாளப் படங்களில் நடிக்கவும் தயார் என அறிவித்துள்ளார் ரீமா.

சில மாதங்களுக்கு முன் மும்பையில் நள்ளிரவுப் பார்ட்டி ஒன்றில் காதலருக்கு மோதிரம் அணிவித்து ரீமாவின் நிச்சயதார்த்தம் நடந்தது நினைவிருக்கலாம். ஆனால் திருமணம் நடக்கவில்லை. மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தப் போகிறாராம் ரீமா!

அப்போ… கல்யாணம்?!

English summary
Reema Sen, who recently engaged with a Delhi based hotelier, is returning to South cinema after a long break. Now Reema has put all speculations and suspense about her impending marriage to rest and doing a Telugu film, which will be shot in Malaysia for a month.
 

Post a Comment