4/27/2011 10:23:13 AM
'பொய் சொல்ல போறோம்', 'கோவா', 'பலே பாண்டியா', 'கோ' படங்களில் நடித்திருப்பவர் பியா. நிருபர்களிடம் அவர் கூறியதாவது: எல்லோரையும் போல எனக்கும் காதல் வந்தது. வந்த வேகத்தில் மறைந்தும் விட்டது. எனது தனிப்பட்ட வாழ்க்கைப் பற்றி கேட்காதீர்கள். அது மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளக் கூடியதல்ல. 'கோ' படத்தில் எனக்கு நல்ல கேரக்டர் கிடைத்தது. எல்லோரும் இரண்டாவது ஹீரோயினாக நடித்தது ஏன் என்று கேட்கிறார்கள். கேரக்டருக்கு முக்கியத்துவம் இருந்தால் எந்த கேரக்டரிலும் நடிக்கலாம். வில்லியாகவும் நடிப்பேன். நீச்சல் உடை அணிவதும், முத்தக் காட்சியில் நடிப்பதும் அதன் அவசியத்தை பொறுத்து முடிவு செய்வேன். தற்போது தமிழ் கற்று வருகிறேன். அதிக தமிழ்ப் படங்களில் நடிக்கும்போது சென்னையில் குடியேறுவேன். இந்தியில் நிறைய விளம்பர படங்களில் நடித்துள்ளேன். விரைவில் ஒரு இந்திப்படத்தில் நடிக்க உள்ளேன்.
Post a Comment