போட்டோகிராபரை மணந்தார் பாக்யாஞ்சலி

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
போட்டோகிராபரை மணந்தார் பாக்யாஞ்சலி

4/25/2011 12:26:15 PM

தமிழில் 'உன்னையே காதலிப்பேன்', 'நெல்லு', 'கோட்டி' படங்களில் ஹீரோயினாக நடித்தவர் மலையாள நடிகை பாக்யாஞ்சலி. 'உன்னையே காதலிப்பேன்' பட வில்லன் நடிகர் வேலு மீது புகார் கூறி பரபரப்பு ஏற்படுத்தியவர் இவர். இவருக்கும் கேரளாவை சேர்ந்த புகைப்படக்காரர் அனிஸுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, இவர்கள் திருமணம் கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் நேற்று காலை நடந்தது. இதில் இரண்டு குடும்பத்தை சேர்ந்தவர்கள் மட்டும் கலந்துகொண்டனர். இதுபற்றி பாக்யாஞ்சலியிடம் கேட்டபோது, 'திருமணம் நடந்தது உண்மைதான். நாளை (இன்று) எர்ணாகுளம் திருப்போனிக்கராவில் உள்ள நாயர் சமாஜ அரங்கில் உறவினர்கள், நண்பர்கள் கலந்துகொள்ளும் திருமண நிகழ்ச்சி நடக்கிறது. வரும் 29-ம் தேதி கோழிக்கோடில் திருமண வரவேற்பு நடக்கிறது. இதில் திரையுலகினர் கலந்துகொள்கிறார்கள். திருமணத்துக்குப் பிறகு நடிப்பது பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை' என்றார்.





Source: Dinakaran
 

Post a Comment